Connect with us

ஷவர்மா பிரியர்களுக்கு ‘செக்’….. அதிர்ச்சி தகவல்..?

sh

Tamil Nadu

ஷவர்மா பிரியர்களுக்கு ‘செக்’….. அதிர்ச்சி தகவல்..?

ஷவர்மா என்ற வார்த்தை இளைஞர்களை மட்டும் கவராமல் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது என்பது மிகையாகாது. கபூஸ் எனும் ரொட்டி அதில் மைனஸ், கோஸ் மற்றும் இறைச்சியை சேர்த்து சாப்பிடும் போது நம்மைபே அறியாமல் அதன் ருசிக்கு அடியையாகி விடுகிறோம்.

இந்நிலையில் உலகம் முழுவது பிரபலமடைந்துள்ள ஷவர்மா துருக்கி நாட்டை பாரம்பறியமாக கொண்டது. முதலில் ஆடு, மாடுகளில் தாயாரிக்கப்பட்டு வந்த ஷவர்மா நாளடைவில் அனைத்து வகை இறைச்சிகளிலும் அறிமுகமாகியது.

இந்நிலையில் தொடர்ச்சியாக சமைக்கப்படும் இறைச்சியை ரொட்டியில் சுற்றி தரப்படும் சவர்மா வடிவத்திலும் சுவையிலும் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

1997 -ல் முதன் முதலில் இந்திய உணவகங்களில் சவர்மா பரிமாறப்பட்டதாக வரலாறு கூறினாலும் சமூக வலைத்தளத்தின் தாக்கமும் அதிகம் வளர்ந்து வரும் துரித உணவின் கலாச்சாரமும் தான் அண்மைக்காலங்களில் ஷர்மாவின் மோகத்திற்கு கொடிகட்டி பறக்க காரணமாக அமைந்தது.

இந்த வர்த்தக சூழலை பயன்படுத்த ஆங்காங்கே முளைக்கும் தெருவோரக் கடைகளில் சுகாதார முறைகளைப் பின்பற்றி தரமான முறையில் தயாரிப்பார்களா என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது.

இதனால் சமீபத்தில் ஏற்படும் மரணங்களும் உடல் உபாதைகளும் ஏற்படுவதால் அபாய மணியை அடிக்க சுகாதார முறையில் தரமான உணவுகளை மட்டும் சாப்பிட அறிவுறுத்தும் மருத்துவர்கள் நம்நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே நம் உடல்நலத்திற்கு உகந்ததாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top