ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு செக்!

632fbe707ff731221b607e4db906a890

ஓடிடியில் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓடிடியில் ரிலீஸ் செய்யும் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அதேபோல் திரையரங்குகளில் ரிலீசாகி 4 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் இந்த நிபந்தனைக்கு உட்பட்ட தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் வெளியிடுவோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்

மேலும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யும் திரைப்படங்களுக்கு பிரீமியர் காட்சிக்காக திரையரங்குகளை வழங்க மாட்டோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த அறிவிப்பை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர கூட்டமொன்றை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.