பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் அளிக்கின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவை விட பல மடங்கு சத்துக்கள் நிறைந்தது.

ஆனால் இது போன்ற நட்ஸ் வகைகளின் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் சாதாரணமாக வாங்கி சாப்பிட முடியாது. அப்படி என்றால் நாம் வாங்கி சாப்பிடக்கூடிய மலிவான நட்ஸ்கள் ஏதாவது இருக்கிறதா என்றால் இருக்கிறது.

அவைவும் இதைப் போல பல மடங்கு சத்துக்களைக் கொண்டவை தான். என்னென்ன என்று பார்க்கலாமா…

வேர்க்கடலை

பாதாம் முந்திரியை விட இரு மடங்கு சத்துகளைக் கொண்டது வேர்க்கடலை. புரதம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, போலிக் அமிலம், வைட்டமின் டி மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதன் விலையைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு கிலோவே ரூ.100 ஐவிடக் குறைவு தான்.

அதே நேரம் முந்திரி, பாதாமின் விலை என்றால் ரூ.700 முதல் ரூ.1200 வரை செலவாகும்.

தினமும் ஒரு கை அளவு வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்களைக் கரைக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இதய வால்வுகளைப் பாதுகாக்கும். இதயம் சம்பந்தமான நோய்களையே வராமல் தடுக்கும். இளமைப் பொலிவைக்கூட்டும் விதத்தில் சருமத்தைப் பளபளப்பாக்கும்.

நினைவுத்திறனை அதிகரிக்கும். மனஅழுத்தம் குணமாகும். இதில் உள்ள நல்ல கொழுப்பானது உடல் எடையைக் குறைக்கிறது. இதில் உள்ள போலிக் அமிலம் அதிகளவில் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை பலமாகும்.

கொண்டைக்கடலை

kondaikadalai
kondaikadalai

இவற்றில் வெள்ளை மற்றும் கருப்பு என இருவகைகள் உள்ளன. கருப்பு கொண்டைக்கடலையில் தான் சத்து அதிகம். போலிக் அமிலம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுவதால் மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேiவாயான போலிக் அமிலம், ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளதால் அவசியம் சாப்பிட வேண்டும். வெள்ளைக்கொண்டைக்கடலையை விட நார்ச்சத்துக்கள் அதிகம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வரவே வராது.

சோயாபீன்ஸ்

அசைவ உணவில் தான் புரதச்சத்து அதிகமாக உள்ளது என்பர். இது தவறு. அசைவ உணவுக்கு நிகரான புரதச்சத்து உள்ள ஒரே உணவு சோயாபீன்ஸ். இதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 240 மில்லி கிராம் கால்சியம், 690 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்;தும் இந்த சோயாவில் உள்ளது. இதய நோய் பாதிப்புக்குள்ளானோர், குழந்தை இல்லாத பிரச்சனையால் அவதிப்படுவோர், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம்.

உலர் திராட்சை

Ular thiratchai
Ular thiratchai

இதில் அத்தியாவசியச் சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. பலரும் இதை அப்படியே சாப்பிடுவர்.

ஆனால் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது. தினமும் இரவில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் அந்தத் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வர புற்றுநோய்க்காரணிகள் அழிக்கப்படுகிறது.

ரத்த சோகை குணமாகிறது. சிறுநீரகக் கற்கள் கரையும். மலச்சிக்கல் குறையும். ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனையும் குறையும்.

பேரீச்சை

pereechai
pereechai

இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து ரத்த சோகை அல்லது அனீமியாவைக் குணப்படுத்துகிறது. புதிய ரத்த செல்களை உருவாக்கி ரத்த உற்பத்தியை உண்டாக்கும். இதனால் உடலில் உள்ள ரத்த அளவு சீராக இருக்கும். ரத்த அளவு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் போதும். ரத்தம் கட்டுக்குள் வரும். இதில் உள்ள செலினியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற நுண்ணிய சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கும்.

ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களும் குணமாகும். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானோர் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். முதிர்வயதில் ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானத்தைத் தடுக்கிறது. நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்குகிறது. பார்வைத் தெளிவாகும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 முதல் 2 வரை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews