சவுக்கு சங்கர் விடுதலை.. ஆனால் ஒரு கண்டிசன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன் படி, கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு மது தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அமர்வு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி முன் அமர்வுக்கு வந்தது.

அப்போது சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தர பிறப்பித்தனர். இருப்பினும், 4 வழக்குகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் 4 வழக்குகல் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும், நாளை முதல் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.