Chat GPTஐ தூக்கி சாப்பிட்ட Google BARD: இத்தனை வசதிகளா?

உலகம் முழுவதும் வருங்காலத்தில் AI டெக்னாலஜி என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி தான் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI டெக்னாலஜி புகுந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல துறைகளில் AI டெக்னாலஜி புகுந்து விட்டதால் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் AI டெக்னாலஜி துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறப்படுகிறது.

AI டெக்னாலஜி என்பது 100 பேர் பார்க்கும் வேலையை சில நிமிடங்களில் முடித்து விடும் என்பதால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வசதியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பரபரப்பான உலகில் AI டெக்னாலஜி போன்ற ஒரு அமைப்பு வருங்காலத்திற்கு நிச்சயம் தேவை என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது. AI டெக்னாலஜியால் வேலைவாய்ப்பு குறையும் என்று ஒரு கருத்து இருந்தாலும் வேறு வழிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் AI டெக்னாலஜியை இனி எதிர்காலத்தில் தவிர்க்கவே முடியாது என்றும் கூறப்படுகிறது.

chat gpt vs google bard1முதன் முதலில் Chat GPT என்ற AI டெக்னாலஜி செயலி வெளியான போது அதற்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் கூகுள் நிறுவனம் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு Google BARD என்ற AI டெக்னாலஜி செயலியை உருவாக்கியது. இந்த செயலி ஆரம்பத்தில் பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தற்போது திருத்தப்பட்ட வடிவத்தில் வெளிவந்துள்ளதை அடுத்து பயனாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

இந்த செயலியில் மிகப்பெரிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் இந்த செயலியின் இணையதளத்தை இலவசமாகவே பயன்படுத்தலாம் என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். Chat GPT எதற்கு எடுத்தாலும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் இலவசமாகவே மக்களுக்கு Google BARD  செயலியை பயன்பாட்டை தருகிறது.

மேலும் Google BARD செயலியை மொபைலில் கூட மிகச் சரியாக இயங்குகிறது என்றும் அதனால் மொபைல் பயனாளர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் Google BARD செயலியில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு இமேஜாக கூட பதில் அளிக்கும் வசதி உள்ளது என்றும் ஒரு இமேஜை நாமே அப்லோடு செய்து அது குறித்து கேள்வி கேட்டால் கூட நமக்கு சரியான பதில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் Chat GPT இமேஜ் வசதிகள் இல்லை என்பதும் தெரிந்தது.

மேலும் மொபைலில் வாய்ஸை பயன்படுத்தி கூட Google BARD செயலியில் கேள்வி கேட்க முடியும் என்றும் Google BARD கொடுக்கும் பதிலை டாக்குமெண்ட் அல்லது மெயிலில் கூட டவுன்லோட் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Google BARD ஜிமெயிலில் இருந்து கூட பயன்படுத்த முடியும் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

அதுமட்டுமின்றி ஒரு மெயிலை உருவாக்க, ஒரு மெயிலுக்கு பதில் அளிக்கவும் இந்த Google BARD மூலம் மிக மிக சிறப்பாக செய்ய முடியும். மேலும் 20க்கும் மேற்பட்ட புரோகிராம் மொழிகள் இதில் சப்போர்ட் செய்யும் என்பதும் தமிழ் உள்பட பலமொழிகளில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் Chat GPTஐ தூக்கி சாப்பிடும் அளவுக்கு Google BARD செயலி உள்ளது என்றுதான் அனைவரும் கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.