செத்ததுக்கு பிறகும் ஜாதி துரத்துது! மயானத்திலுமா ஜாதி? நீதிபதி ஆவேசம்!

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக ஜாதிய கொடுமைகள் காணப்படுகிறது.  மக்கள் மத்தியில் இன்றைய தினம் கூட சாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவை வாழும் காலம் மட்டும் இல்லாமல் இறந்த பின்னும் தொடர்வதாக காணப்படுகிறது. மயானம்

இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். அதன்படி அவர் ஒருவனின் மரணத்துக்குப் பிறகும் கூட ஜாதி அந்த மனிதனை விட வில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

மயானம் என அறிவித்த பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தானம் செய்ய அனுமதியுங்கள் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க கோரி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில பகுதிகளிலும் கூட சாதிய கொடுமைகள் நடைபெறுகிறது, இதனால் உயர் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு அதிரடியாக தனது உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment