விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் இணையும் சார்லி ஹீரோ?

தளபதி விஜய்யின் வாரிசு படம் வெளியாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் தளபதி 67 அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கயுள்ளார்,

மேலும் சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது கன்னட நட்சத்திரம் ரக்ஷித் ஷெட்டியும் நடிக்கலாம் என சினிமா வட்டாரங்களில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

தளபதி 67 டீம் ரக்ஷித் ஷெட்டியை ஒரு கதாபத்திரம் தொடர்பாக அணுகியுள்ளது. ஆனால் 777 சார்லி நடிகர் இதில் கையெழுத்திடவில்லை, ஆனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ராக்ஷி ஷெட்டி வந்தால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் பெரிதாகும்.

சமீபத்தில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது, சில நாட்களுக்கு முன்பு இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் மற்றும் விஜய் இடையே ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதிக்குள் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பொங்கல் கொண்டாட்டம்! லேட்டஸ்ட் புகைப்படம்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. த்ரிஷாவும் விஜய்யும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.