இபிஎஸ் வழக்கு! அறப்போர் இயக்கம் அவதூறு பேச கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் மீது அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் புகார் குறித்த மனுவை அறப்போர் இயக்கம் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது. இது தன்னுடைய பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற அவதூறு பரப்புவதற்கு தடை தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகளே உஷார்! விதி மீறி நம்பர் பிளேட்.. ஐகோர்ட் கிளை உத்தரவு!!

அதே போல் இதற்கு ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டெண்டர் ஒதுக்குவது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் அறப்போர் இயக்கம் தலையிடமுடியாது என கூறினார்.

குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி… கேரளாவில் பயங்கரம்!!

இதனை தொடர்ந்து டெண்டர் ஒதுக்கீடு நிறுவனங்கள் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடர தொடரவில்லை எனவும் மலிவான விளம்பரத்துக்காக இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வாதிடப்பட்டது.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அறப்போர் இயக்கம் அவதூறு பேசக்கூடாது என தீர்ப்பளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.