புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து: பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் ஏற்பட்ட தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயிலில் தேர் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் கூறப்படுகிறது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் இவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு  காயம்  அடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், பிரகதாம்பாள் கோயிலில் தேர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment