Connect with us

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

rain chennai4101 1638687228

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!: வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல் மாதம் தொடங்கி விட்டாலே நம் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் காணப்படுவர். ஏனென்றால் வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தென் மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் இதமான அறிவிப்பு ஒன்று கூறியுள்ளது. அதன்படி இன்றைய தினம் தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டு நாட்கள் தொடர்ந்து தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top