
Tamil Nadu
காலையில உஷ்ணமா? கவலையே வேண்டாம்; அடுத்த மூணு மணி நேரத்தில் கொட்டப் போகுது மழை!!
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கி விட்டது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளப் பகுதிகளில் சீசன் தொடங்கியது என்று கூறலாம். மேலும் குற்றாலம் பகுதிகளில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிட்டது.
இருப்பினும் கூட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் உஷ்ணமான சூழ்நிலையை உணர்ந்து கொண்டு வருகின்றனர். இதன் மத்தியில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
