ஜல்லிக்கட்டு போட்டியில் தேதி மாற்றம்! முன்னதாக நடைபெற உள்ளதாக அறிவிப்பு!!

ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை பொங்கல் திருவிழா என்றும் அழைப்பர். பொங்கல் வந்துவிட்டால் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து பொங்கல் திருவிழா தொடர்ந்து நடைபெறும்.

அதிலும் குறிப்பாக பொங்கலோடு மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியும் நம் தமிழகத்தில் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டி எப்போதும் காணும் பொங்கல் அன்று நடைபெறும். இந்த சூழலில் இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருவதாக காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தச்சங்குறிச்சியில் வருகின்ற 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை அருகே தட்சங்குறிச்சி கிராமத்தில் 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். வன்னியன்விடுதி  கிராமத்தில் வருகின்ற 16ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 17-ஆம் தேதி நடத்த பரிந்துரை செய்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment