அசாம் இரவு நேர ஊரடங்கில் மாற்றம்: நேரத்தை அதிகரித்து அசாம் அரசு உத்தரவு!

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் தமிழகத்தில் நேற்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்பதால் அந்த நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நம் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைப் போன்று அசாமிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் தற்போது இரவு நேரங்களில் சில மாற்றங்கள் செய்து உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

அதன்படி அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்து அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பதாக இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டுதவணை தடுப்பூசி  போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே உணவகங்கள், விடுதிகள், அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment