பிளஸ் 2 வினாத்தாளில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

b658acb920140bb5a741ed8c33f5081b

இந்த ஆண்டு நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கமளித்துள்ளார்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை மற்றும் மாணவர்களின் மனநிலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆய்வு செய்தார் 

இந்த ஆய்வுக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார் 
மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது என்றும் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு நடைபெறும் என்றும் வினாத்தாளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment