Connect with us

இந்து சமய அறநிலையத்துறையை ‘தமிழர் சமய அறநிலைத்துறை’ என மாற்றுக-சீமான்;

aranilaithurai

தமிழகம்

இந்து சமய அறநிலையத்துறையை ‘தமிழர் சமய அறநிலைத்துறை’ என மாற்றுக-சீமான்;

எந்த ஒரு ஆட்சியிலும் இல்லாத வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்டத்திற்கு ஏற்றபடி அமைச்சர்களை நியமித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையை மேம்படுத்தும் வகையில் அதற்கென்று அமைச்சர் ஒருவரையும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி எம்எல்ஏ சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் நாள்தோறும் கோவில்கள் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான அறிவிப்புகளை கூறிக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த துறையை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி நபிகள் குறித்து அவதுறுவாக பேசிய நுபுர் சர்மாவை பிரதமர் மோடி ஏன் கண்டுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்புகளை வைத்து பாஜக அரசியல் செய்வதாக சென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்து சமய அறநிலையத்துறையை இனி தமிழர் சமய அறநிலைத்துறை என உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top