
பொழுதுபோக்கு
வேற லெவல்..! சந்திரமுகி 2 Heroin இவங்கதானா?
கடந்த 2005 ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல் மற்றும் பிரபு நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஹிட் படம் என்றே கூறலாம்.
குறிப்பாக 700 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனையை படைத்தது. அதுமட்டுமில்லாமல் 1999-ல் வெளியான படையப்பா படத்தின் வசூலையும் இந்த படம் முறியடித்து. இந்தப் படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின் அசத்தலான நடிப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சூழலில் தற்போது சந்திரமுகி பார்ட் 2 படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். அதே சமயம் கதாநாயகி யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அந்த வகையில் சந்திரமுகி 2 படத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
