Connect with us

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் – படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்கள்!

chandramukhi 2 filmibeat 1657954880

பொழுதுபோக்கு

சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் – படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்கள்!

கடந்த 2005 ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல் மற்றும் பிரபு நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படம் அமைந்தது.

அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகள் கழிந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

62e7950e09682

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் அவரும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் தான் நடிகையுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளார். மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் .என கூறப்படுகிறது.

62e79514d36df

படத்திற்கு பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது. தற்போது இந்த மைசூர் படப்பிடிப்பில் நடிகை ராதிகா இணைந்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top