சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியதும்..

1a9d7af4d17dad8877b4939a97e054d9

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் நிகழும். நிலவினால் சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும், சூரியனால் நிலவு மறைக்கப்படும்போது சந்திரகிரகணமும் நிகழும். கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் செய்யக்கூடாதவை, செய்யவேண்டியவை என பெரியோர்கள் நியதி வகுத்துள்ளனர்.

செய்யக்கூடாதவை..

கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. 
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது . எந்தவித நல்ல நிகழ்வுகளையும் நிகழ்த்தக்கூடாது. உணவோ, நீரோ எதும் உட்கொள்ளுதல் கூடாது.

0fda9a1a47da5a85c6e120ddf3e8e4fc

கிரகணம் நிகழும்போது செய்ய வேண்டியவை..

கர்ப்பிணி பெண்கள் கைகால்களை அசைக்காமல், படுத்து உறங்கலாம். உறக்கம் வராவிட்டால் இறைவனை தியானத்தப்படி படுத்திருக்கலாம். படுக்கை நூலை பிய்த்தெடுப்பது, கைக்கால்களை முறுக்குதல் கூடாது. இவ்வாறு செய்தால் கைகால் குறையுள்ள பிள்ளை பிறக்கும். காமம், திருட்டு, பொய் மாதிரியான தீய எண்ணங்களை மனதில் நிழலாட விடக்கூடாது. அவ்வாறு செய்தால் தீய குணமுள்ள பிள்ளை பிறக்கும் என்பது ஐதீகம். ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் இறைவனை தியானித்திருப்பது கிரகணத்தின் கேடிலிருந்து நம்மை விடுவிக்கும்.. சமைத்த உணவினை மூடி வைக்க வேண்டும். நீர், உப்பு, அரிசி இவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைத்தால் உணவு கிரகணத்தால் பாதிக்காது. தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள். 

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியது…

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து முடித்து, வீட்டை சுத்தம் செய்து, ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். முடியாதவர்கள் வீட்டினில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும் .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews