7 மாவட்டங்களில் இன்று கனமழை! இன்று முதல் தீபாவளி வரை மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியல்!!

தமிழகத்தின் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதுவும் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை ,புதுக்கோட்டை ,குமரி போன்ற மாவட்டங்களில் நாளையதினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீபாவளி அன்று வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment