கோகுல் ராஜ் கொலை வழக்கு: சுவாதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

கோகுல்ராஜ் கொலை வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் மாணவரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை விவகாரம் தொடர்பாக யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

சொத்து குவிப்பு வழக்கு! மின்வாரிய பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை!!

இதனை எதிர்த்து மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது கடந்த வாரம் வந்தது. அப்போது பிறழ்சாட்சியான சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையில் சுவாதி அளித்த வாக்குமூலத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன் படி, நீதிமன்றத்தில் சுவாதி ஆஜரானார். இந்த சூழலில் கடந்த முறை போல் நீதிமன்றத்தில் பொய்யான வாக்குமூலம் கொடுத்தால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர்.

அப்போது பேசிய சுவாதி அன்றைய தினத்தில் அளித்த வாக்குமூலத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்தார். இதனால் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அடுத்த 2 மணிநேரத்தில்.. இந்த மாவட்டங்களில் கனமழை?

இருப்பினும், பிறழ்சாட்சியான சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.