அனேக இடங்களில் மழை-மக்கள் மகிழ்ச்சி; அடுத்த மூன்று மணி நேரம் வரை நீடிக்க வாய்ப்பு..!!

நம் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவுகிறது. ஆனால் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதுவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கரூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சேலம் மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், விருதுநகர், ராமநாதபுரம். திருநெல்வேலி, தென்காசியில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment