Connect with us

குடையை ரெடியா வச்சிக்கோங்க மக்களே!! இந்த 15 மாவட்டங்களுக்கு மழை என்று அறிவிப்பு;

rain 1 1

தமிழகம்

குடையை ரெடியா வச்சிக்கோங்க மக்களே!! இந்த 15 மாவட்டங்களுக்கு மழை என்று அறிவிப்பு;

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நம் தமிழகத்தில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மே மாதம் முதலில் நாம் தமிழகத்தில் இந்த மழைப்பொழிவு தொடங்கியது என்று கூறலாம்.

ஏனென்றால் மே மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.  ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து சற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top