Connect with us

மக்களே இரவில் யாரும் வெளியே போகாதீங்க! வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

மழை

தமிழகம்

மக்களே இரவில் யாரும் வெளியே போகாதீங்க! வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று தீவிரமடைந்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் மழைப்பொழிவானது அதிகமாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. தற்போது சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்தின் குறிப்பிட்ட 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை இன்னும் மூன்று மணி நேரத்தில் பேசலாம் என்று கூறியுள்ளது.

அதன் வரிசையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top