அப்படி போடு குஷியான நியூஸ்!! தமிழ்நாட்டிற்கு மழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்தில் தை பிறந்து விட்டால் வழி பிறக்கும் என்பதை விட வானிலையில் சற்று மாற்றம் இருக்கும் என்பது நம்பிக்கையாக காணப்படுகிறது. ஏனென்றால் தை மாதத்திற்கு பின்பு மெல்ல மெல்ல குளிர்காலம் தோய்ந்து வெயில் காலம் ஆரம்பிக்கத் தொடங்கும்.

இந்த சூழலில் திடீரென்று வானிலை ஆய்வு மையம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியது பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதன்படி ஜனவரி 22, 23 ஆகிய இரண்டு தினங்களில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் மன்னர் வளைகுடா, குமரி கடலில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதே வேளையில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறியுள்ளது. இன்று முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.