அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தற்போது வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த ஐந்து நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இதர மாவட்ட மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment