Connect with us

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு வாய்ப்பே இல்லை!!

மழை

தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு வாய்ப்பே இல்லை!!

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு வாய்ப்பே இல்லை!!

தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் பல பகுதிகளில் உஷ்ணமான சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு கூறியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top