அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் கனமழை..!!

தற்போது வங்க கடலில் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மே 10ஆம் தேதி மாலை வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடற்கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு துறை கணித்துள்ளது.

இவை இன்று காலை விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் 970 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வடக்கு ஆந்திரம் மற்றும் ஒரிசா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நம் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூரில் இன்றும் நாளையும் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment