
Tamil Nadu
காலையிலேயே கனமழையா!! அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு;
தற்போது நம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் மே மாதம் முழுவதும் தமிழகத்தில் இதமான வானிலையே நிலவியது.
அதிலும் கடலோரம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வந்தது. இந்த நிலையில் ஜூன் 6ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த கோடைகாலத்தில் காலையிலே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தற்போது கூறியுள்ளது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
