Connect with us

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்;

மழை

தமிழகம்

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்;

சமீப காலமாக நம் தமிழகத்தில் மிதமான மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மே மாதம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top