Connect with us

எச்சரிக்கை!! இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்;

கனமழை

செய்திகள்

எச்சரிக்கை!! இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்;

ஜூன் மாதம் தொடங்கி விட்டாலே தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிவிடும் என்று கூறுவார்கள். இந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்யும்.

அதே போன்று தான் தற்போது வானிலை மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இன்று முதல் ஜூலை எட்டாம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று மாநில ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top