வெளுத்து வாங்க போகும் கனமழை; இன்றும், நாளையும் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எந்த ஒரு ஆண்டும் இல்லாத வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகளவு கிடைத்தது.

இதனால் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் கருத்து கூறிக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உள்ள நிலையில் இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்களில் 16 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று,  நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

மேலும் விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூரிலும் கனமழை பாய்ந்து வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுள்ளனர் ஆயினும் ஒரு தரப்பு மக்கள் எரிச்சலான சூழ்நிலையை உணர்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment