இந்த ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

நம் இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நிலவிக் கொண்டு வருகிறது. பொதுவாக இந்த காலத்தில் தென்னிந்தியா பகுதிகளில் அந்த அளவிற்கு மழைப்பொழிவு இருக்காது.

ஆனால் தற்போதைய ஆண்டு மே மாதம் முதலே தென்னிந்திய பகுதிகளில் கனமழை பரவலாக பெய்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையமும் கூறி இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

இந்த கனமழையானது நாளைய தினமும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா பகுதியில் நிலவிக் கொண்டிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறினது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment