நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..
கிழக்கு திசை மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வருகின்ற பிப்.21 ஆம் தேதி மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிப்.22: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
