அலர்ட்! அடுத்த 3 மணி இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சற்று தாமதமாகவே தொடங்கினாலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பாஜகவில் இருந்து காயத்ரி விலகல்!!

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாகப்பட்டினம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாதி சான்றிதழ்: விதிகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.