Connect with us

6 மாவட்ட மக்களே உஷார்; அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!!

rain chennai4101 1638687228

Tamil Nadu

6 மாவட்ட மக்களே உஷார்; அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!!

6 மாவட்ட மக்களே உஷார்; அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் மெல்ல மெல்ல தொடங்கிவிட்டது. இருப்பினும் ஆங்காங்கே தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு தான் வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இயல்பான வெப்ப நிலையைவிட 2,3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக கடந்த வாரம் வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை கிடைத்தது.

இந்த நிலையில் 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், அரியலூர், திருப்பத்தூர், மதுரை ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top