இன்று முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் இன்றைய தினம் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் மத்தியில் இன்று தமிழகத்தில் உள்ள பல இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதன் காரணமாக தமிழகத்தில் இன்று தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் இன்றைய தினம் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம், குமரி, திருநெல்வேலி, டெல்டா மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 26ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்ட மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை, குமரி, நெல்லை, டெல்டா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் காரைக்காலில் மற்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
