Connect with us

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்; அடுத்த ரெண்டு நாளைக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

மழை

தமிழகம்

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்; அடுத்த ரெண்டு நாளைக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்; அடுத்த ரெண்டு நாளைக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை தமிழகத்தில் வாழும் மக்கள் ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்தது. அதோடு மட்டுமில்லாமல் இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு ரெட் அலார்ட் ஒதுக்கி இருந்தது.

அதன் பின்னர் மெல்ல மெல்ல வடகிழக்கு பருவமழை குறைந்தது. அதுவும் குறிப்பாக கடந்த பத்து நாளுக்கு முன்புதான் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. விலகிய பின்புதான் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளைய தினம் தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் பின்னர் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top