Connect with us

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!!

rain chennai4101 1638687228 1

தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

நாளை தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் இலேசான முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top