தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் மாத இறுதி தொடங்கி நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. டிசம்பர் மாதம் தொடங்கிய பின்னர் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்தது.

மழை

இவ்வாறுள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இவை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி இரண்டாம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை  பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment