தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்பச்சலனம் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கு மாவட்டங்கள், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.

இதனிடையே வரும் 29- ஆம் தேதி குமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30, 31-ல் குமரி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்ன வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment