Connect with us

மக்களே உஷார்!! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்..

rain

தமிழகம்

மக்களே உஷார்!! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்..

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, ஈரோடு மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌
மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

வரும், 30.04.2022: தென்‌ தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகுரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

01.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top