இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! நாளை வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம்!

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் மெல்லமெல்ல கன மழையின் தாக்கம் குறைந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு தினங்களில் தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment