தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் நவம்பர் மாதம் முழுவதும் காணப்பட்டது. அதன் பின்னர் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இந்த நிலையில் ஜனவரி தொடங்கிய பின்னர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று குறையத் தொடங்கியது.
இருப்பினும் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டத்திற்கு லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. காலை நேரத்தில் மலைப் பகுதிகளில் மட்டும் லேசான பனிமூட்டம் நிலம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.