நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக மீண்டும் தமிழகத்தில் கன மழை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கன மழையால் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்தநிலையில் 9 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரியிலும் மதியம் 12.30 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் புத்தாண்டு கொண்டாட சென்றோர் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.