மக்களே உஷார்!! கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
