முக்கியமான அறிவிப்பு: அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களுக்கு……

தமிழகத்தில் கோடை காலம் மெல்ல மெல்ல நெருங்கி விட்டது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இருப்பினும் ஆங்காங்கே மழை பெய்து தான் வருகிறது. அதன்படி கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சியில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது.

பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளைய தினம் தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 13ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 14ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment