Connect with us

மக்களே கவனம்!! இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

rain chennai4101 1638687228 2

தமிழகம்

மக்களே கவனம்!! இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

மக்களே கவனம்!! இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்.19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top