தணிந்த மழை மீண்டும் தொடக்கம்; அடுத்த நான்கு நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

2022 ஆம் ஆண்டு தொடங்கிய உடன் எதிர்பாராதவிதமாக  கனமழை மீண்டும் தொடங்கிவிட்டது. அதுவும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையமும் கடலோர மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 15, 16 தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி இன்று தென்கிழக்கு வங்க கடலில் பலத்த சூறாவளி வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இந்த சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்களுக்கு இன்று மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment