Connect with us

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு!!

News

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு!!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

தற்போது நம் தமிழகத்தில் வானிலை ஆனது அனைவருக்கும் சாதகமான சூழலில் காணப்படுகிறது. ஏனென்றால் பல பகுதிகளில் காற்றானது நன்றாக வசப்படுவதால் உஷ்ணமான சூழ்நிலையை தவிர்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் கோடையில் மட்டுமின்றி உஷ்ணமான சூழ்நிலையும் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு இதமான சூழ்நிலையை உணர்கின்றனர். இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு இன்பமான தகவலை அளித்துள்ளது.85469bc02f7c92c6b58454e1db76980c

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தப்படி ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். அதனை தொடர்ந்து திருப்பூர் தென்காசி உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதியில் நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் தென்காசி தேனி கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதியில் நீலகிரி கோவை தேனி திருப்பூர் திண்டுக்கல் தென்காசி கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான வானிலை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top