2 வாரத்திற்கு இயல்பை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு! நேற்று பெய்த மழைப்பொழிவு நிலவரம்!!

சில நாட்கள் முன்புதான் வடகிழக்கு பருவமழையை தொடங்கியதன் விளைவாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இயல்பை விட கூடுதல் மழை பொழிவு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம்

அதன்படி தென் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட கூடுதலாக பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இதுவரை வடகிழக்கு பருவமழை 211.4 மில்லிமீட்டர் பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக கோபிசெட்டிபாளையத்தில் 11 சென்டி  மீட்டர் மழை பொழிந்து உள்ளது. ராசிபுரம் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேரையூர், சிவகாசி, சேலம் ,பெருந்துறையில் தலா ஏழு செண்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கோவில்பட்டி, ஆத்தூர், விருத்தாச்சலம், கயத்தாறு, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் தலா 6 சென்டி  மீட்டர் மழை பெய்துள்ளது. மஞ்சளாறு, குப்பநத்தம், ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாரகத்தில் தலா ஆறு சென்டி  மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

குமாரபாளையம், சின்னக்கல்லார் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வாஞ்சி மணியாச்சி, துறையூர், ராமேஸ்வரம், கொடைக்கானல், தர்மபுரி, ஓசூரில் தல 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வைகை அணை, வத்திராயிருப்பு, அவலாஞ்சி, ஒகேனக்கல், ஊத்துக்குளி வேதாரண்யத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment